நவம்பர்-2017 மாதம் கேரவன் என்ற நாளிதழ் , அமித் ஷாவை விடுவிக்க நீதிபதி மோஹித் ஷா, எனது சகோதரர் நீதிபதி லோயாவிடம் 100 கோடி வரை பேரம் பேசினார் என்று லோயாவின் சகோதரியின் நேர்காணலை வெளியிடுகிறது.. அதுவரை , இயற்கை மரணம் என்று நம்பிக்கொண்டிருந்த அனைவரியும், இந்த கட்டுரை திகைப்படைய வைக்கிறது , ஒரு வேளை கொலையாக இருக்கலாம் என்று ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில், நீதிபதி லோயா விசாரித்து வந்த்து பிஜேபி தலைவர் அமித் ஷா தொடர்பான போலி என்கவுண்டர் வழக்கு.

இந்த கட்டுரை வெளியானதும், அமித் ஷா, மகாராஸ்டிர முதலவரை அழைத்து, கட்டுரையாளரைப் பற்றி விசாரிக்கிறார். ஆனால், கேரவன் இதழ் , இந்த பூச்சாண்டி சிறிதும் பயப்படவில்லை. அடுத்தடுத்து, தொடர்ந்து , நீதியதி லோயாவின் பிரேத பரிசோதனை அறிக்கை முரண்பாடுகளையும், இது குறித்து மூத்த தடயவியல் பரிசோதனை நிபுணரின் கருத்துக்களையும் வெளியிடுகிறது.

அடுத்ததாக, நீதிபதி லோயா தங்கியிருந்த ரவி பவன் வுருந்தினர் இல்லத்தில் பணி புரியும் ஊழியர்களையும் நேர்காணல் செய்திறது. நேர்காணலின் போது, நீதிபதி லோயா இறந்தார் என்ற விசயமே நாளிதழைப் பார்த்துதான் தெரியும் என்பது. இதோடு நின்றதா, இல்லை, பிரேதப் பரிசோதனை செய்த மருதுவரைப் பற்றியும், அவர் செய்த முறைகேடுகளை பற்றியும் எழுதியிருக்கிறது.

இதற்கிடையில், நீதிபதி லோயாவின் வழக்கில் ஆவணங்களை திரட்டி வரும் வக்கீல் அபியன் பரகாதே என்பவருக்கு மகாரஸ்டிரா முதல்வரின் நெருங்கிய உறவினர் சஞ்சய் பண்டாவிஸ் என்பவரிடம் இருந்து மிரட்டல் வருகிறது. “2019லும் நாங்கள் (பிஜேபி) தான் ஆட்சிக்கு வருவோம் , அப்போது உன்னை பார்த்துக் கொள்கிறோம்” என்று போனில் மிரட்டிய ஆடியோவை போலிஸில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

ஜனவரி-2018 ல் , நீதிபதி. செல்லமேஸ்வர் உள்ளிட்ட உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள், எங்கே நாம் சும்மாயிருந்தால், நீதிபதி லோயாவின் வழக்கும் ஊத்தி மூடப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், தலைமை நீதிபதியின் பாகுபாடான அணுகுமுறை குறித்து பொது வெளியில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். இந்த நேர்காணலுக்கு பின்னர் நீதிபதி லோயாவின் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

நீதிபதி லோயா மரணத்தை விசாரிக்க சொல்லும் வழக்கில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்ட முன்னாள் கடற்படைத் தளபதி . ராமதாஸைப் பார்த்து “ யார் இந்த தளபதி” என்று நக்கலாக கேட்கிறார் மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்கி. எல்லையில் போர் வீரன் எல்லாம் வெறும் டைம் பாஸ்தான், எதிராக இருந்தால் யாரக இருந்தாலும், பிஜேபியை பொறுத்தவரை “தேச துரோகி”தான்.

நீத்பதி லோயாவின் மரணம், அதை தொடர்ந்த அரசு மற்றும் அவர் சார்ந்த துறையின் பாரபட்சமான அணுமுறையே, நீதிபதி செல்ல்மேஸ்வருக்கு பிரேக்கிங் பாயிண்டாக இருந்திருக்கிறது , ரொம்பவும் பாதித்திருகிறது. இதை தொடர்ந்தே , தலைமை நீதிபதியின் அணுகுமுறையை கேள்வி கேட்கிறார், அரசின் தலையீடுகளை வெளிப்படுத்துகிறார். நேற்று (07/04/2018) , ஜெயலலிதாவின் முறைகேடான சொத்துக் குவிப்பு வழக்கில் , தீர்ப்பை தாமதபடுத்தியது தொடர்பான , நீதிபதியின் கருத்துகளும், இதையே காட்டுகிறது, அது, இனிமேலும் அமைதியாக இருந்தால், மொத்தமும் நாசாமாகிவிடும்.

ஏற்கனவே, தன்னிச்சையாக செயலபடும் பல அமைப்புகளை பிஜேபி காவிமயப்படுத்தி விட்டது, இன்னும் வரும் காலங்களில் மிகவும் அதிர்ச்சி தரும் விசயங்கள் வந்தாலும் ஆச்சிரியப் பட வேண்டாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.