வேலூர்,
வேலூர் அருகே நடந்த வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் சேன்பேட்டையில் வெடி பொருள் தயாரிக்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.