திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் மாநில அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் நீடாமங்கலத்தில் உள்ள நீலன் பள்ளி மாணவர்கள் 1500 பேர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.