citu

காஞ்சிபுரம்,

டாங்சன், ஜேகே டயர்ஸ் தொழிலாளர் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட வலியுறுத்தி சிஐடியு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பதூர் வட்டம், இருங்காட்டு கோட்டையில் டாங்சன் என்னும் கார் உதிரிப்பாக உற்பத்தி ஆலை 13.03.2018 முதல் நிர்வாகம் சட்ட விரோத கதவடைப்பு அறிவித்து 114 தொழிலாளர்களுக்கு வேலை மறுத்துள்ளது. மேலும் மணிமங்கலத்தில் ஜே.கே.டயர்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே நிர்வாகம் ஒப்புக்கொண்டவாறு ஊதிய உயர்வு பிரச்சனையை பேசி முடிக்க முன்வராமல் காலம் கடத்துவதால் 23.03.2018 முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விரு தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பாதிப்பு மற்றும் தொழிலாளர் வேலைப் பாதிப்பு ஆகியவை ஆகியவை இப்பகுதியில் தொழில் அமைதியைப் பாதிக்க கூடிய கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுமுகத் தீர்வு ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி ஓரகடம் பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: