சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன் இவரது மகள் வைத்தீஸ்வரி (16). புவனகிரியிலுள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். வைத்தீஸ்வரி வாய் சரிவர பேச முடியாதவர். கடந்த 1 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில்தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதிஊருக்கு வெளியே வயலில் பிணமாககிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து உடலை கைபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அப்போது, வைதீஸ்வரி பிணமாக கிடந்த இடத்தில் மாற்று சமூகத்தை சார்ந்த ஆறுமுகம், ராசு, குமார் ஆகியோர் இரவு நேரத்தில் மது அருந்திக்கொண்டிருந் தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணை செய்த போது முன்னுக்கு பின்னாக தகவல்கள் கூறியுள்ளனர்.பின்னர், மோப்ப நாயை வரவழைத்தனர். அந்த நாய் ஆறுமுகம் என்பவர் வீட்டுக்கு அருகே நின்றது.அதே ஊரில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவருக்கும் வைத்தீஸ்வரிக்கும் ஒரு தலை காதல் இருந்து வந்ததும் இந்த விசாரணையின்போது தெரிய வந்தது.

பிறகு, மணிகண்டனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 1 ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வைத்தீஸ்வரியை வழிமறித்து அருகே இருந்த வயல் பகுதிக்குதூக்கி சென்றதாகவும் அதில்ஏற்பட்ட தகறாறில் வைத்தீஸ்வரியை கொலை செய்து உடலை வயல்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைத்து விட்டு சென்றதாகவும் மணிகண்டன் கூறியதாக அவரை கைது செய்து பொது மக்கள் மத்தியில் நடித்து காட்டச் சொல்லியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இதுகுறித்து உண்மையை அறிய இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி, மாவட்டத் துணைத் தலைவர் மல்லிகா, சிவகாமி, கீரைப்பாளையம் ஒன்றியச்செயலாளர் செம்மலர், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் அம்சயா உள்ளிட்ட குழுவினர் சம்பந்தபட்ட கிராமத்திற்கு சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து சத்தம் போட்டுகூப்பிட்டாலே கேக்கும் தொலைவில்தான் வைதீஸ்வரி வீடுகள் உள்ளது. தனி ஆளாக இந்த சம்பவத்தை செய்திருக்க முடியாது. கூட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் பகல்-இரவு பாராமல் பெற்றோர்கள் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் வைத்தீஸ்வரியின் உடல் இல்லை. பின்னர் 3 ஆம் தேதி அதி காலை அவரது உடல்,செருப்பு, கை பை உள்ளிட்டவை கிடந்துள்ளதில் சந்தேகம் உள்ளது. தற்போது குற்றம் சுமத்தபட்டுள்ள குற்றவாளி மணிகண்டனுக்கு தொடர்பு இருந்தாலும் இவருடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் யார் என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து அவர்களையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.