தேனி: குரங்கணி தீ விபத்தில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மாதம் 11 ஆம் தேதி காட்டு தீ பரவியது. இதில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 39 பேர் தீயில் சிக்கியதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீயில் சிக்கியவர்கள் மீட்டனர். முன்னதாக சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 30 பேரை சிகிச்சைக்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதித்திருந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நாளுக்கு நாள் ஒருவர் உயிரிழந்து ஏப்ரல் 3 ஆம் தேதிவரை பலி எண்ணிக்கை 22 ஆக இருந்தது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா என்ற மேலும் ஒரு இளம் பெண் வியாழனன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: