ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தண்டலம் பஜாரிலிருந்து தடம் எண் 593-என்ற இரண்டுமாநகர பேருந்துகள் சென்னை உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டு வந்தன. மேலும் அம்பத்தூர் பணிமனையிலிருந்து தடம் எண் 562-என்ற மாநகர பேருந்து அம்பத்தூர்எஸ்டேட் வரை இயக்கப்பட்டது.இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி,கல்லூரி, பணிக்கு செல்பவர்கள் மற்றும் வியாபாரம் உள்ளிட்டபல்வேறு பகுதிகளுக்கு சென்று வருபவர்கள் பயனடைந்து வந்தனர். மேற்கண்ட பேருந்துகள் கடந்த ஒருமாத காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன.இதன் காரணமாக தண்டலம்,லெனின் நகர், காக்கவாக்கம்,வண்ணாங்குப்பம், முக்கரம்பாக்கம், தும்பாக்கம், தொலவேடு, அண்ணாவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் போக்குவரத்து இன்றி தவிக்கின்றனர்.

பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் வாலிபர் சங்கம், மாதர் சங்கம் தலைமையில் ஏப்-3அன்று காலை பேருந்துகளை சிறை பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.அப்போதுஅடுத்த ஒரு வாரத்தில் தடம் எண் 593-என்ற பேருந்து இயக்கப்படும் என பாடியநல்லூர் பணிமனையின் கிளை மேலாளர் உறுதியளித்தார்.

அம்பத்தூர் பணிமனை அதிகாரிகள் யாரும் வராததால் நேரடியாக சந்தித்து பேசுவது என தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.இந்த போராட்டத்திற்கு சிபிஎம்வட்டக் குழு உறுப்பினர் வி.வாசுதேவன் தலைமை தாங்கினார். இதில்விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ.ராமமூர்த்தி, வட்டச் செயலாளர் பி.அருள், விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.சசிகுமார், மாதர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ரம்யா, சிஐடியு நிர்வாகி கே.முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.