புதுதில்லி:
தில்லி சுகாதாரத்துறை அமைச்சரும், ஆத் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட 6 பேர், 2015-16 நிதியாண்டில் ரூ. 4 கோடியே 63 லட்சத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததாக கடந்த ஆகஸ்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சிபிஐ அளித்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரும், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனங்கள் பிரயாஸ், அகிசந்த் டெவலப்பர்ஸ், மங்கள்யத்தன் நிறுவனம் ஆகியவற்றில் ஜெயினுக்கும், அவரது மனைவிக்கு மூன்றில் ஒரு பகுதி பங்குகள் உள்ளதாக குற்றம்சாட்டு வைத்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.