சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மோடி அரசு  திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் பாஜக  தேர்தல் ஆதாயம் அடைய முயன்று வருகிறது. இந்நிலையில் பாஜகவின் மோசடித்தனத்தை கண்டித்து தமிழகம் எங்கும்  பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர்  மற்றும்  மாணவர்கன் பல்வேறு போராட்டங்களில் ஈடுட்டு வருகின்றனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இறுதி தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம்,  கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீரை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்கவும் மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மேலாண்மை வாரியம் அமைப்பதில் திட்டமிட்டு காலம் தாழ்த்தியது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட 6 வாரங்கள் முடிவடைந்த நிலையில், கர்நாடகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வாய்ப்புள்ளதால் 3 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். என்றும் தீர்ப்பில் கொடுக்கப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றும் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையை கண்டித்து தொடர்ந்து மாணவர்களும் திமுக, சிபிஎம் சிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாக பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்மறியல்
தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண் வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ரயில் மறியல் செய்தவர்களை தடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்கள் போராட்டம்
திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நாமக்கல்-ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாண்டிச்சேரி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மையங்ககில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.