புதுதில்லி, ஏப்.4-

நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுத்த கடன்களில் 2.41 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான் என்று ஒரு கேள்விக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் இது தொடர்பாக  ஓர் உறுப்பினர் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடந்த மூன்றாண்டுகளில் 2,41,911 கோடி ரூபாய் செயல்படா சொத்துக்கள் என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனாலும் அவர் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகள் யார் என்பதை இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது அரசாங்கமோ வெளியே சொல்வதில்லை என்றும், அவை ரகசியம் என்றும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு இந்த ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட்டிருப்பது முந்தையை ஆட்சியில் நடந்ததைவிட இரு மடங்குக்கும் மேலாகும். எனினும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு மட்டும் இந்த அரசாங்கத்திற்கு மனமில்லை.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.