தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, சேலம்,மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராஜபாளையம், நீலகிரி, விழுப்புரம், நெய்வேலி, நாமக்கல், திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள், பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் வாள் சண்டை, குத்துச்சண்டை, ஜூடோ, கிரிக்கெட், தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கால்பந்து, நீச்சல், டென்னிஸ், டேக்குவாண்டோ, ஜிம்னாஸ்டிக், இறகுபந்து, பளுதூக்குதல், ஸ்குவாஷ், கபடி,வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், மாணவர்களுக்கு என 18 விடுதிகளும், மாணவிகளுக்கு என11 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.இந்த விளையாட்டு விடுதிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்புபயிலும் மாணவர்கள் சேர முடியும். இவர்களுக்கு தங்குமிடம், உணவு, பள்ளிக் கட்டணம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு மே 2 முதல் 4-ஆம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெறுகிறது. விளையாட்டு விடுதிகளில் சேர விருப்பமுள்ள வேலூர் மாவட்ட வீரர்கள் அதற்கான விண்ணப்பத்தை வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.