மாட்ரிட்:
ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்காக நடைபெற்று வரும் லா லிகா தொடரில் தற்போது 30-வது லீக் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

30-வது லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில் கெட்ஃபே-பெட்டிஸ் அணிகள் மோதின.மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கெட்ஃபே அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.முதல் பாதியில் கெட்ஃபே அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் விதிமுறையை பின்பற்றாமல் விளையாடியதற்காக மஞ்சள் நிற அட்டையை பெற்றனர்.கெட்ஃபே அணியின் முன்கள வீரர் போர்டிலோ 65-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலடிக்காமல் தவறவிட்டார்.ஆட்டத்தின் 80-வது நிமிடம் வரை இரு அணிகளும் கோலடிக்க முடியாமல் திணறினர்.

இதனால் ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்டிஸ் அணி வீரர் ஜூனியர் 89-வது நிமிடத்தில் கோலடிக்க கெட்ஃபே அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.இறுதியில் பெட்டிஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
30-வது லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில்,31-வது லீக் சுற்று ஆட்டங்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்குகிறது

Leave a Reply

You must be logged in to post a comment.