திண்டுக்கல்,
புலையன் இன மக்களை பழங்குடி இன பட்டியிலில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு கூறியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வனஉரிமை சட்டத்தை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்றும், பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், பழங்குடிகளான புலையன், ஈரோடு மலையாளி, வேட்டைக்காரன் போன்ற மக்களை பழங்குடியின பட்டியலில் தமிழக அரசு உடனடியாக இணைக்க வேண்டும், குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவேடன் காட்டுநாயக்கன், பளியர் இன மக்களுக்கு உடனடியாக சாதிச்சான்று வழங்கிட மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்களை சேதமாக்கும் காட்டுப்பன்றியை கேரள மாநிலம் போல் வனத்துறையினர் பிடிப்பதற்கோ, அல்லது சுடுவதற்வோ அனுமதி வழங்கியது போல் தமிழகத்திலும் அத்தகைய அனுமதி வழங்கப்பட வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் விவசாய விளைபொருள் சேதத்திற்கு உரிய நஷ்டஈடு ஆட்சியர் வழங்க வேண்டும்.

புலையன் இன பழங்குடி மக்களை பழங்குடி இன பட்டியிலில் சேர்க்கலாம் என்று தமிழ்நாடு பழங்குடியினர் ஆராட்சி மைய இயக்குநர் பரிந்துரை செய்தும். தமிழக அரசு உடனடியாக மத்திய அரசாங்கதிற்கு அனுப்பி வைத்து புலையன் இன மக்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும். நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்ற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்திய நாடு முழுவதும வன உரிமை சட்டம் அமுலாக்கப்பட்டு ஒரு கோடியே 12 லட்சம் ஏக்கர் நிலம் பழங்குடி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த சட்;டம் இதுவரை மனுக்களை பெறுவதும், சர்வே செய்வதும், மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் பட்டா வழங்கும் பணி துவங்கியுள்ளது என்பது பழங்குடி மக்களை இரண்டாம் பட்சமாக அரசு பார்க்கிறது என்பதையே காட்டுகிறது. இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு டில்லிபாபு தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: