திருப்பூர். ஏப்.3-
தேர்தல் பணி செய்த ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஆரம்ப பள்ளி ஆசியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காததை கண்டித்து செவ்வாயன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலக தேர்தல் பிரிவை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். இதன்பின் அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ,தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் கனகராஜா, மாநகர செயலாளர் ஜோசப் உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: