கிறிஸ்ட்சர்ச்:
5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின்,முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில்,2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் வெள்ளியன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள் குவித்தது.நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 278 ரன்களில் ஆட்டமிழக்க,29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 352 ரன் குவித்தது.

382 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்திருந்தது. செவ்வாயன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.நியூசிலாந்து அணி 219 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சோதி-வாக்னர் இருவரும் பந்தை அடித்து ஆடாமல் பிட்ச் பகுதிகளில் மட்டுமே தவழ விட்டனர்.இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் படாதபாடு பட்டனர்.

இங்கிலாந்து வீரர்களை திணறவைத்த வாக்னரை கேப்டன் ஜோ ரூட் வெளியேற்றினார்.வாக்னர் 7 ரன்கள் எடுப்பதற்கு 103 பந்துகளை வீணடித்தார்.வாக்னர் ஆட்டமிழந்துவுடன் ஆட்டம் போட்டி டிராவில் முடிக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது.சிறப்பாக விளையாடிய சோதி 168 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இங்கிலாந்து அணி தரப்பில் பிராட்,லீச்,மார்க்வுட் தலா 2 விக்கெட் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் தொடரை 1-0 என கைப்பற்றியது.ஆட்டநாயகனாக டிம் சவுத்தியும்,தொடர் நாயனாக டிரென்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: