லண்டன் : இத்தாலியில் 1372 மனித உருவம் கொண்ட ரோபோக்கள் ஒன்றாக இணைத்து இசைக்கு ஏற்ப நடனமாடியது கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.

உபிடெக் என்ற சீன நிறுவனம் மனித உருவம் கொண்ட ஆல்பா 1எஸ் ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் அசாதாரணமாக நெகிழ்வான தன்மை மற்றும் இசைக்கு ஏற்ப அசைவுகளை உடைய நடனமாடும் திறமை கொண்டது. இந்த நிறுவனம் இத்தாலியில் 1372 ரோபோக்கள் பல வேறுபட்ட நகர்வுகளை இசைக்கு ஒத்திசைந்தது ஒருசேர நடனமாடியுள்ள நிகழ்வு கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கின்னஸ் உலக சாதனை பதிவாளரான லாரென்சோ வால்ட்ரி இந்த ரோபோக்களின் நடனம், மற்றும் அசைவுகள் ஆகியவற்றை கண்காணித்தார். இதற்கு முன்னால் கடந்த ஆகஸ்ட் 2016ல் 1069 ரோபோக்களை வைத்து நடனமாடிய நிகழ்வே கின்னஸ் உலக சாதனையாக கருதப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: