திருவாரூர்,
திருவாரூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட எதிக்கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் ஒன்றிணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்தையில் தோல்வியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: