திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடந்த வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆபத்தான நிலையில் தந்தை மகன் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை லேடி டோக் காலேஜ் பின்புறம் வசிப்பவர் விஜயராகன் (42), இவரது மனைவி சித்ரா (40) பாட்டி முத்துலட்சுமி குழந்தைகள் திருவிக்ரம் (15). லட்சுமி (8) ஆகியோர் மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக பழனி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை மஞ்சையன் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது பழக்கனூத்து அருகே செல்லும் போது கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வேகமான  வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.  இதில் காருக்குள் இருந்த சிறுவன் திருவிக்ரம், தந்தை விஜயராகன் படுகாயமடைந்தனர். டிரைவர் மஞ்சையன், சித்ரா, முத்துலட்சமி, லக்ஷனா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர

இறந்த நால்வரின் உடல்களும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேதபரி சோதனைக்காக அனுப்பப்பட்டது. படுகாயமடைந்த சிறுவன் திருவிக்ரம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். துந்தை விஜயராமன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: