விருதுநகர், ஏப்.1 –
சர்வதேச கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் (யு.ஐ.டி.பி.பி) நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஆர்சிங்காரவேலு நேபாளம் செல்கிறார்.

சர்வதேச கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆசிய- பசிபிக் பிராந்திய நாடுகளிலுள்ள கட்டுமானத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கூட்டமும், சம்மேளன நிர்வாகிகள் கூட்டமும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறுகிறது. இதையொட்டி நேபாள நாட்டின் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் நடைபெறுகிறது.  இந்த மூன்று நிகழ்வுகளிலும் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில், சங்கத்தின் நிர்வாகிகள் கே.வி.ஜோஸ், கே.பாலகிருஷ்ணன் (கேரளா), பன்வர் சிங் (ராஜஸ்தான்), சுபாஷ் சன்யால் (மே.வங்கம்) ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு நேபாளம் செல்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.