மதுரை:
ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி சனிக்கிழமையுடன் காலாவதியானது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அந்த ஆலையின் விரிவாக்கத்திற்குக் கொடுத்துள்ள அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஏ.குமரொட்டியாபுரம் மக்கள் நடத்தி
வரும் போராட்டம் சனிக்கிழமை யன்று 48-வது நாளாகத் தொடர்ந்தது.
ஏ.குமரொட்டியாபுரம் மக்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆலையை நிரந்தரமாக
மூட வலியுறுத்தி வருகிற ஏப்.4-ஆம் தேதி ஆலையை முற்றுகை
யிடப் போவதாக கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்
அனுமதிச் சான்று சனிக்கிழமையுடன் காலாவதியாகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலைகள்
உட்பட பெரிய தொழிற்சாலை கள் செயல்பட ஒவ்வொரு ஆண்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு புதுப்பித்தலை இறுதி செய்யும் அதிகாரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருக்கே உள்ளது. அனுமதி காலாவதி
யான நிலையில் மீண்டும் அனுமதி கோரி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.இந்த நிலையில் ஆலை தொடர்ந்து செயல்பட மாசுக்கட்டுப்
பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என குமரொட்டியாபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏ.குமரொட்டியாபுரம் மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தில் வெள்ளியன்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் பங்கேற்றார்.

அனுமதியை புதுப்பிக்க சிபிஎம் எதிர்ப்பு                                                                                                                           மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி காலாவதியாகியுள்ள நிலையில், அனுமதியை மீண்டும் புதுப்பிக்க கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்வதாக சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலை குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவ
டிக்கை எடுக்கப்படும், மாசு தடுப்புச் சாதனங்களின் செயல் திறன் குறித்தும் ஆய்வு செய்யப்
பட்டு வருகிறது. ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.