வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளைத் தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் குறித்து, நடத்தப்பட்ட விரிவான தகவல் ஆய்வின் அடிப்படையில், வரி செலுத்திய அதேசமயம், 2016-17 மற்றும் 2017-18ஆம் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு, அதை நினைகூட்டும் வகையில் வருமான வரித்துறை கடிதங்களை அனுப்பியுள்ளது.இந்தக் கடிதங்களைப் பெற்ற வரி செலுத்தியோர் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகளைக் கோரியும் ஏராளமானோர் பதில் அளித்துள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டும், வரி செலுத்தியோர் குறிப்பாக, சுயவேலை வாய்ப்பு அல்லது ஊதியம், ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறுவோர், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதை தூண்டும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் ஆயகார் பவன், மகாத்மா காந்தி சாலை,நுங்கம்பாக்கம், சென்னை-600 034, பிஎஸ்என்எல் கட்டிடம், எண்.16, கிரீம்ஸ் சாலை, சென்னை-600 006, 130பி, முடிச்சூர் சாலை, மேற்கு தாம்பரம், சென்னை – 600 045 ஆகிய இடங்களில் செயல்படும் ஆயகார் சேவை மையங்களில் 2018 மார்ச் 26-முதல் 2018 மார்ச் 31ஆம் தேதி காலை 9.15 மணி முதல் மாலை 5.45 மணி வரை தங்கள் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யலாம்.கூடுதல் விவரங்கள் மற்றும் விளக்கங்களுக்கு வரி செலுத்துவோர், பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தை 044-28338014 / 28338314 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

%d bloggers like this: