சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செல்பவர்களை பிடிக்க டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனையை முடுக்கி விடுவதற்காக மாநகர போக்குவரத்து கழகமேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் வாரத்தில் 3 நாட்கள் நேரடியாக சென்று பேருந்துகளில் கண்காணிக்கின்றனர்.

பேருந்களில் நடத்துனர்கள் நடந்து கொள்ளும் விதம்பற்றியும், டிக்கெட் ஒழுங்காக கொடுக்கிறார்களா? என்பதையும் கண்காணிக்கிறார்கள். டிக்கெட் எடுக்காமல் பயணிகள் இருந்தால்அவர்களிடம் நடத்துனர் டிக்கெட் கேட்கிறாரா? என்பதையும் பார்க்கிறார்கள். டிக்கெட் பரிசோதர்களும் முழுமையாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம்பயணச்சீட்டு இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ததாக 2130 பயணிகளிடம் இருந்து 3 லட்சத்து 21,550 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.இந்த மாதம் (மார்ச்) டிக்கெட் இன்றி பயணம் செய்த 1305 பயணிகளிடம் இருந்து அபராதமாக 2 லட்சத்து 61,100 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.2 மாதங்களில் மட்டும் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து650 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்கு வரத்து கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: