பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம் என்று அரசு கூடுதல் தலைமைவழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கருத்து தெரிவித்த பிறகும் அதற்கான அரசாணையை வெளியிடாத அதிகாரிகளை கண்டித்து சனிக்கிழமை (மார்ச் 31) இரவு சென்னை தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியல் செய்தனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆணை வெளியிடுவதற்கு மேலும் நான்கு நாட்கள் கால தாமதம் ஆகும் என்று அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கொதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் இரவு 7.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

இதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு ஆலோசனை கூற வந்த வழக்கறிஞர் காரல் மார்க்சையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: