பெண்களுக்கு எதிரானபாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் சென்னை விமான நிலையத்தில் விமான பணிப் பெண்களை சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி நடத்தியசோதனை ஸ்பைஸ் ஜெட்விமான பணிப்பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்கானில் நடைபெற்ற ஸ்பைஸ் ஜெட் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், விமான பயணிகள் சோதனையை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக ஸ்பைஸ் ஜெட் விமான பணிப் பெண்களை சக பாலின அதிகாரிகளைக் கொண்டு நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விமான பணிப்பெண்கள் சிலர் விமான நிலையத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு சனிக்கிழமையன்று (மார்ச் 31) போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளதாவது, விமான பயணத்தின் போது உணவு மற்றும் சில சேவைக்காக பயணிகளிடம் நாங்கள் பணம் பெறுவதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். நாங்கள் விமானத்தை விட்டு இறங்கியபின் நேராக கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. நேராக சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறோம்.

அங்கு ஆடையை களைந்து நிர்வாணமாக்கி கூனிக் குறுகச் செய்கின்றனர். சோதனை என்ற பெயரில் தொடக்கூடாத இடங்களில் தொடுகின்றனர். 10 வருடமாக பணியில் இருக்கும் ஒருபெண்ணை மாதவிலக்கு சமயத்தில் அணிந்திருந்த சானிட்டரி நாப்கினை எடுக்கச் சொல்லி சோதனையிட்டுள்ளனர். இவ்வளவு மோசமான முறையில் சோதனையிடச் சொல்லி எந்த விதிகள் கூறுகிறது. இந்த செயலுக்கு பெயர் என்ன? எங்களுடைய சுயமரியாதையை இழந்து நிற்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.