மன்னார்குடி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா.முத்தர சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு மார்ச் 28 முதல் 31ஆம் தேதி வரை மன்னார்குடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான
சனிக்கிழமையன்று புதிய நிர்வாக க்குழுவும், மாநில செயலாளரும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய செயலாளராக இரா.முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள் ளார். காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை குறித்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் ஆறு வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று வழங்கியுள்ள தீர்ப்பை திசைத் திருப்பி காவிரி மேலாண்மை வாரியம் என்பதை காவிரி மேற்பார்வை குழு என்று மாற்றி மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு மக்களுக்கு முற்றிலும் விரோதமான உச்சநீதி
மன்ற தீர்ப்புக்கும் எதிரான அடாவடித்தனமான இந்தச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்ப்பில் சில குறைபாடுகள் இருந்த போதிலும் இதனையும் மறைமுகமான சூழ்ச்சியின் மூலம் மாற்றி அமைக்க சதி செய்கிறது பாரதிய ஜனதாவின் மத்திய அரசு. மாநில உரிமைகளை எந்த காலத்திலும் எதற்கும் விட்டுக் கொடுக்காதவர்கள் தமிழ் மக்கள். சட்டத்திற்கு புறம்பாக பதவியை காப்பாற்றிக் கொள்ளுதல் என்ற ஒற்றை சுயநலத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட இன்றைய தமிழக ஆட்சியாளர்கள், இந்த அபாயத்தை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் தொடர்ந்து மழைப்பொழிவு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான அளவிற்கு கீழே இறங்கி வருகிறது. நிச்சயமற்ற பருவநிலையால் விவசாயம் பேராபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நீரற்ற பூமியாக தமிழகம் மாறி வருகிறது. அச்சம் தரத்தக்க இந்த அபாயங்களை உணர்ந்து கொண்டு தமிழக மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் ஒன்று திரண்டு மத்திய அரசின் சதியை முறிக்க வேண்டும். காவிரி மேற்பார்வை குழு என்பதை நிராகரித்து காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க  வைத்து, நமது உரிமையை பாதுகாத்திட ஓரணியில் திரள வேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.

குறிப்பிட்ட கால வேலை நியமனத்துக்கான நிலையாணை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறுமாறு கோரியும், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கும் முயற்சியைக் கைவிட கோரியும், தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி, தமிழ்வழிக் கல்வியை அமலாக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும், பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தீப்பெட்டித் தொழிலை பாது காத்திட வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.