புதுதில்லி:
சிபிஎஸ்இ தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டி வெளியான விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாகி மத்திய அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது. கேள்வித்தாள் வெளியானதில் ஜார்க்கண்ட் மாநிலம் சத்றா மாவட்ட ஏபிவிபி அமைப்புச் செயலாளர் சதீஷ் குமார் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறார். மற்றொரு ஏபிவிபி பிரமுகர் பங்கத்சிங்கும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் வினாத்தாள் வெளியானதற்கு பாஜக அரசே நேரடியாக பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: