திருவண்ணாமலை மாவட்டம் மங்கலத்திலிருந்து ஆர்பாக்கம் கிராமம் வரை செல்லும் சாலை, குண்டும் குழியுமாக உள்ளதால், அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கூட்ரோட்டிலிருந்து ஆர்பாக்கம் கிராமம் வரை சுமார் 7 கீ.மீ தூரம் சாலை குண்டும்குழியுமாக உள்ளது. இச்சாலை சீட்டம்பட்டு, கோவூர், லாடவரம், கல்லனந்தல், மன்சுராபாத், பாடகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கலுக்குச் செல்லபிரதான சாலையாகவும் உள்ளது.சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இச்சாலையை முறையாக பராமரிக்காததால் தற்போது குண்டும்,குழியுமாக உள்ளது.

இச்சாலை வழியாக அரசு நகரப் பேருந்து, கல்லூரி, பள்ளிபேருந்துகள் செல்கின்றன. இதனால் பேருந்தில் பயணிக்கும் மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கிராம மக்கள் மருத்துவமனை செல்வதற்கும், விவசாயிகள் வேளாண் சாகுபடிக்கு, இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளை பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும் இந்த சாலைளை தான் பயன்படுத்தியாக வேண்டும்.சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே 10 க்கு மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மங்கலம் – ஆர்பாக்கம் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • ஜோ. செந்தாமரைகண்ணன்

Leave A Reply

%d bloggers like this: