நீலாங்கரை அருகே உள்ள பனையூர் எம்.ஜி.ஆர்.நகர் முதல் தெருவில் வசிப்பவர் அப்துல் அகமது. இவரதுமகன் சமீர் அகமது (16). இவர்அந்தப் பகுதியில் உள்ள ஒருதனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சமீர், தனது நண்பர்கள் 3 பேருடன் சோழிங்கநல்லூர் காரப்பாக்கம் ராமசாமி தெருவில் உள்ள மாநகராட்சி கிணற்றில் சனிக்கிழமை நண்பகல் குளிக்கச் சென்றார். அவர்கள் 4 பேரும் அங்கு குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென சமீர் தண்ணீரில் மூழ்கிமாயமாகிவிட்டார். இதையடுத்து அவரது நண்பர்கள் சமீரை தேடினர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினரும், தகவலறிந்து அங்கு வந்த அப்பகுதி மக்களும், கிணற்றில் இறங்கி சமீரை தேடினர். சிறிது நேரத்தில் சமீரை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்தகண்ணகி நகர் காவல் துறையினர் சமீர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

%d bloggers like this: