புதுதில்லி

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, 3 மாதகாலம் அவகாசம் கேட்டு மத்திய அரசசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது 6 வார காலத்துக்குள் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த 6 வார கால கெடு கடந்த 29ம் தேதி நிறைவடைந்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் காலம் தாழ்த்துகிறது என்று தமிழக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மத்திய அரசைக்கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில் காவிரி தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என தமிழக அரசும், புதுவை அரசும் விளக்கம் அளிக்கின்றன. வாரியம் இல்லை என கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் கூறுகின்றன. எனவே இதற்கு விளக்கம் அளிக்குமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு கேட்டுள்ளது. இது திட்டமிட்டு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை கேளிக்குள்ளாக்கும் செயல் என்று விவசாயிகள் கொந்தளிப்புடன் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: