காசா,
பாலஸ்தீன தலைநகர் காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் நாட்டை 16 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது

Leave A Reply

%d bloggers like this: