நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மத்தியில். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டதொரு ஆய்வின் படி, இந்தியாவில் 7.5 கோடிப்பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மற்றும் ஐந்துகோடிப்பேர் உயிருக்கு ஆபத்தினை உண்டாக்கும் வகையிலான உடல்பருமனைக் கொண்டவர்களாக உள்ளனர்.

மற்றொரு அச்சப்படும் கணக்கு, இந்திய வளரிளம்பருவத்தினரில் 9.5விழுக்காட்டினர் அதிக எடைகொண்டவர்களாகவும் மற்றும் 5விழுக்காட்டினர் உடல் பருமன் பாதிப்பைக் கொண்டவர்களாக உள்ளதும் அதில் தெரியவந்துள்ளது என்று சென்னை பி.எஸ். மருத்துவமனையின் தலைவர்–டாக்டர்.சுப்ரமணியன் கூறினார். உடல் பருமன் குறித்த பிரச்சனைகளுக்கு முழுமையான அணுகுமுறையுடன் கூடிய தீர்வுகளை அளிக்கும் சென்னையில் சென்டர் பார் பேரியாட்ரிக் ரூமெட்டபாலிக் சர்ஜரீமையம் தொடங்கப்படவுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஏசியன் பேரியாட்ரிக்ஸ் மருத்துவமனையுடன் சென்னையில் உள்ள வி.எஸ்.மருத்துவமனை கூட்டாக இந்த மையத்தை அமைக்கிறது. இம்மையம் உடல்பருமன் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்கும் என்றும் சுப்பிரமணி கூறினார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு,புற்றுநோய், ஒற்றைத்தலைவலி, கருப்பை பாதிப்புகள், மலட்டுத்தன்மை, முழங்கால் மற்றும் மூட்டுவலி, மனஅழுத்தம், உறக்க மூச்சிறைப்பு, இரைப்பை அமிலநோய், முடக்குவாதம் மற்றும் மூட்டுநோய் போன்ற பல்வேறு பரவும் தன்மையற்ற நோய்கள் உடல்பருமனோடு தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: