திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் – அரசு ஊழியர் இடையே நீடித்து வந்த பிரச்சனை பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக க.சு.கந்தசாமி பொறுப்பேற்றது முதல், அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், ஊழியர்களை அலைக்கழிப்பதாகவும், பி.டி.ஓ துணை பி.டி.ஓ., உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்வதாக கோரி அரசு ஊழியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுஊழியர் சங்கம் முயற்சித்தும், ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அனுமதி தராமல் இருந்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி புதனன்று (மார்ச்28) துறைவாரி அரசு உழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் மு.அன்பரசு, நிர்வாகிகள் எஸ்.தமிழ்செல்வி, எம்.சுப்பிரமணியன், ஏ.பெரியசாமி, சி.ஆர்.ராஜ் குமார், பார்த்திபன், அண்ணாதுரை, பாரி, ராஜா, மாவட்ட நிர்வாகிகள் வேடியப்பன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் பொதுச் செயலாளர் மு.அன்பரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சியர், அரசு ஊழியர்களிடையே உள்ள பிரச்சனைகள் குறித்து துறை வாரியாக ஊழியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படும் வகையில் அரசு ஊழியர்கள் பங்காற்றுவோம்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: