புழல் அடுத்த சாரதிநகர் 4-வது தெருவில் காவல்துறை ஆய்வாளர் நடராஜ் மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு காரில் இருந்து 2 வாலிபர்கள் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர். அங்கு 5 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.இதையடுத்து சிவகாசியைச் சேர்ந்த கண்மணி, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் சாரதி நகர், 3-வது தெருவில் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு பெங்களூரில் இருந்து காரில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்காவை கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.திருவள்ளூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் திருவள்ளூர் நகரம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனையிட்டனர்.அப்போது நேதாஜி சாலை, கம்பர் தெரு, பெருமாள் தெரு உள்ளிட்ட பெட்டிக் கடைகளில் பான் பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து புகையிலை விற்ற திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்த சின்ன துரை, கம்பர் தெருவை சேர்ந்த வெங்கடேசன், பெருமாள் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய 3 வியாபாரிகளை கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.