அரசாணைப்படி சம்பளம் வழங் கக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஏப்ரல் 9 முதல் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் வியாழனன்று திருச்சியில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன் மற்றும் நிர்வாகிகள், சம்மேளனக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி ஊதியம் வழங்கிடக்கோரி தமிழக அரசுக்கும், ஊரக வளர்ச்சி இயக் குநர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. அரசாணைப்படி சம்பளம் வழங்கக்கோரி மார்ச் 12 அன்று ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோரிக்கை மனு வழங்கியும் தீர்வு ஏற்படவில்லை. எனவே, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில் பருவ மழை இல்லாததால் கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற் பட்டுள்ளது. ஊராட்சி குடிநீர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டால் கிராமங்களில் குடிநீர் விநியோகம், துப்புரவு பணி கடுமையாக பாதிக்கப்படும். தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு அரசு வெளியிட்ட அரசாணையை ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகம் அமலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.625, நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.510, பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ரூ.432 வீதம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். தற்போது ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே ஊதியம் வழங்கப் படுகிறது. எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காணவில்லை என்றால் ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.