தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 13வது மாநாடு தருமபுரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.தேவேந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சி. காவேரி வேலை அறிக்கை வாசித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி. மகேஸ்வரி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் துவக்கி வைத்தார். பட்டு வளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எம். சிவப்பிரகாசம், ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் ஆர். ஆறுமுகம், அரசு மோட்டார் வாகன பராமரிப்பு தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் கே.புகழேந்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.மணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.பின்னர் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சி.எம். நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.

அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். தமிழ்செல்வி துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட் டச் செயலாளர் சி.காவேரி கோரிக்கை விளக்கவுரையாற்றினார்சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.யோகராசு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பொன். ரத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.சத்துணவு ஊழியர் சங்க மாநிலதலைவர் ஆண் டாள் நிறைவுறையாற்றினார். பொருளாளர் கே.ராஜா நன்றி கூறினார்.

முன்னதாக தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பேரணி துவங்கி பழையக்கடை வீதி வழியாக பெரியார் மன்றத்தை வந்தடைந்தது.நிர்வாகிகள்மாவட்டத் தலைவராக சி.எம்.நெடுஞ் செழியன், செயலாளராக சி.காவிரி, பொருளாளராக கே.ராஜா, துணைத் தலைவர்களாக பி. வளர்மதி, சி. பாபு, எம். மகேஸ்வரி, எம். அனுசுயா, வி.கணேசன், மாவட்ட இணைச் செயலாளர்களாக ஜி.வளர்மதி, ஆர். தேவேந்திரன், கலைவாணி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.