தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். அதன் விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஏ.குமரொட்டியாபுரம் மக்கள் கடந்த 45 தினங்களாகப் போராடிவருகின்றனர்.

அவர்களது போராட்டம் 46-வது நாளாக வியாழனன்றும் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர் செயலாளர் ராஜா, ஒன்றியச் செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அமர்நாத், மாவட்டச் செயலாளர் சுரேஷ்பாண்டி ஆகியோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும். விரிவாக்கப் பணி
களுக்கு அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிற ஏப்.4-ஆம் தேதி மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏ.குமரொட்டி
யாபுரம் மக்களை நேரடியாகச் சென்று சந்தித்த நிலையில் தூத்துக்குடி சப்கலெக்டர் பிரசாந்த், வட்டாட்சியர்கள் ராமச்சந்திரன், நம்பிராயர், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளர் கண்ணன், வேளாண் இணை இயக்குநர் (பொ) முத்து எழில் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அவர்கள் ஆலையின் புதிய விரிவாக்கம் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஏ.குமரொட்டியாபுரம், குமரகிரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கிணற்றுத் தண்ணீரை ஆய்வுக்காக சேகரித்துச் சென்றுள்ளனர்.

தண்ணீர் மாதிரியைச் சேகரிக்கச் சென்ற அதிகாரிகள் குமரொட்டியாபுரம் மக்களைச் சந்தித்துப் பேசாததோடு தண்ணீர் மாதிரி எடுக்கச் செல்லும் போது அவர்களை அழைத்தும் செல்ல
வில்லை. இந்த சம்பவம் குமரொட்டியாபுரம் மக்களை வேதனையடைச் செய்துள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்புப் பணிகளுக்காக 15 நாட்களுக்கு மூடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.