ஜொஹன்னஸ்பர்க்:
ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென்ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது.

4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும்,2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னருக்கு ஓராண்டு தடையும்,பான்கிராப்டுக்கு 9 மாத தடை விதிக்கப்பட்டிருப்பதால்,ஸ்மித்,வார்னர்,பான்கிராப்ட் ஆகியோருக்கு பதிலாக ரென்ஷா,பர்ன்ஸ்,மேக்ஸ்வெல் ஆகியோர் கடைசி டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.டிம் பெய்ன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்மித்,வார்னர் இல்லமால் ஆஸ்திரேலிய அணி பலமான தென்ஆப்பிரிக்கா அணியை எந்த விதத்தில் சமாளிக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

கடைசி டெஸ்ட் போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.