ஷில்லாங்:
`ஹீரோ இந்தியன் பெண்கள் லீக் இறுதிச் சுற்றுக்கான தகுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மதுரை சேது எப் சி அணி கேரள அணியை 2-0 என்ற கோல் கணக்கி வெற்றி பெற்றது.

மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் ஆறாவது போட்டியில் மதுரை சேது எப் சி அணியும்,கோகுலம் கேரளா எப்.சி அணியும் வியாழனன்று மோதின.தொடக்கம் முதலே அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய மதுரை சேது எப்.சி அணியின் தாக்குதல் பாணி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் கேரளா வீராங்கனைகள் திணறினர்.இதன் பலனாக மதுரை சேது எப்.சி அணியின் ஷபினா 17 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அணிக்கு உத்வேகத்தை அளித்தார். போட்டியின் முதல் பாதியில் அவ்வப்போது மழை விளையாடினாலும், வீராங்கனைகளின் சூடு கிளப்பிய ஆட்டத்தால் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும், கடும் சவாலை சந்தித்தன. பின்னர் ஆட்டம் கொஞ்சம், கொஞ்சமாக வேகமெடுக்க, 86 வது நிமிடத்தில், மதுரை சேது எப் சி அணியின் வீராங்கனை மணிஷா அதிரடியாக கோல் அடித்து அசத்தினார்.

இறுதிவரை போராடிய கேரள அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் கோகுலம் கேரளா அணியை வீழ்த்தி, மதுரை சேது எப்.சி அணி வெற்றி கணியை சுவைத்தது.

ஆட்ட நாயகியாக மதுரை சேது எப்.சி அணியின் கோல் கீப்பர் சௌமியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி குறித்து பயிற்சியாளர் கல்பனா கூறியதாவது,”இது எங்களுக்கு முதல் படி தான்.போக,போக சவால்கள் உள்ளன.முதல் சாவலை உடைத்திருகிறோம். கேரள அணி கடும் சவால் கொடுத்தது.அந்த அணியில் இடம் பெற்றவர்கள் சர்வ தேச போட்டியில் விளையாடிவர்கள், தங்கள் அணியில் இருப்பவர்கள் மாநில அளவிலான வீராங்கனைகள் என்றாலும்,போட்டியை வென்றுள்ளோம். இந்த வெற்றி அணிக்கு உத்வேகத்தை அளிக்கும்.என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 2-ஆம் தேதி ரைசிங் ஸ்டூடண்ட் கிளப் அணியை, மதுரை சேது எப் சி அணி எதிர்கொள்ள உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.