ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,”வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால் தவறான முடிவை எடுத்துவிட்டேன்.பந்தை சேதப்படுத்திய விவாகாரத்திற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.இந்த விவகாரத்தில் யார் மீதும் பழி போட விரும்பவில்லை.எனது தவறை முடிந்த அளவு மறைக்க முயன்றேன்.ஆனால் தோற்றுவிட்டேன்.அதற்கான பலனை தற்போது அனுபவித்துவிட்டேன்.இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்.இதில் இருந்து நல்ல பாடம் கற்றுக்கொண்டேன்.கிரிக்கெட் உலகின் மற்ற வீரர்களுக்கு இந்த நிகழ்வு நல்ல பாடமாக அமையட்டும்.ஏமாற்றமும்,கோபமும் அடைந்துள்ள ஆஸ்திரேலிய ரசிகர்களே என்னை மன்னித்துவிடுங்கள்.

கிரிக்கெட் மீது நான் அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறேன்.கிரிக்கெட் தான் என் வாழ்க்கை.இழந்த மரியாதையை திரும்ப பெறுவேன் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.மாற்றத்துக்கான வழியை மீண்டும் அடைவேன் என நம்புகிறேன் என கண்ணீருடன் கூறினார்.பேசமுடியாமல் கதறி அழுத ஸ்மித்தை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: