சேலம், மார்ச் 28-
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் புதனன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றவளாகத்திலும் வாக்களர்கள் அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் மையத்தில் வாக்களித்தனர். சேலத்தில் 1634 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல், ஓமலூர், வாழப்பாடி ஆத்தூர் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற வளாகத்திலும் வாக்காளர்கள் வாக்களித்து வந்தனர். வழக்கறிஞர்கள் சங்க தேர்தலையொட்டி அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி:
இதற்கிடையே, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முகமது யாகூப் என்பவரை வாக்களிக்க அனுமதி மறுத்ததால் அவர் மண்ணென்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரிடம் இருந்து மணணெண்ணை கேனை கைப்பற்றி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தற்கொலைக்கு முன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை:
கோவையில் 2 ஆயிரத்து624 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களான உள்ளனர் புதனன்று நடைபெற்ற தேர்தலில் 2 ஆயிரத்து 40 வழக்குரைஞர்கள் வாக்களித்தனர். இதன்பிறகு வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை அனுப்பி வைக்கப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் அடுத்தவாரம் சென்னையில் வெளியிடப்படும் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: