தருமபுரி:                                                                                                                                                                                 தருமபுரி மாவட்ட பொது நூலகத்துறைப் பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க இயக்குனர் பொறுப்புக்குப் மார்ச்-26 அன்று பார்வையற்ற பி.சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் புதனன்று (மார்ச் 28) சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் வந்தனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்தி கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு இயக்க நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.நம்புராஜன், 2016 மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி கூட்டுறவுத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம். ஆனால் கூட்டுறவு தேர்தல் ஆணையம், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தையும், அரசியல் சாசனத்தையும் மீறிச் செயல்படுகிறது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: