திருச்செங்கொடு, மார்ச் 28-
பாலியல் வன்கொடுமையை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என வாலிபர் சங்கஇளம் பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் மாநாடு ஒருங்கிணைப்பாளர் சுகன்யா தலைமையில் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் இ.கோவிந்தராஜ் ஆகியோர் வாழத்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், பிரபு உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். இம்மாநாட்டில், பெண்களுக்கு மீதான பாலியல் குற்றச்செயல்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பினை அரசு உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகளவு உருவாக்க வேண்டும். ஏப்ரல் 22ஆம் தேதி பள்ளிப்பாளையத்தில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.