திருப்பூர், மார்ச் 28 –
திருப்பூரில் துளிர் இல்ல இரு நாள் பயிற்சி முகாம் வியானன்று தொடங்குகிறது.

திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள பெம் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் பள்ளியில் நடைபெறும் இம்முகாமில் அறிவியல் இயக்கத் துளிர் இல்லங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் எளிய அறிவியல் செயல்
பாடுகள், ஜப்பானிய ஓரிகாமி காகிதக் கலை, குழந்தைகளுக்குக் கதை சொல்லும் கலை, நாடகப் பயிற்சி, வானியல் நிகழ்வு, கணிதத்தை இனிய முறையில் விளையாட்டாகக் கற்கும் கலை, மந்திரமா? தந்திரமா? ஆகிய நிகழ்வுகள் பற்றி முன்னணி செயற்பாட்டாளர்கள் இரு நாட்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையைப் போதிக்கும் வகையில் இங்கு பயிற்சி பெறுவோர் அடுத்த கட்டமாக உள்ளூர் மட்டங்களில் குழந்தைகளிடம் இந்நி
கழ்வுகளைக் கொண்டு சேர்ப்பார்கள் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் வி.இராமமூர்த்தி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: