சேலம், மார்ச் 28-
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்கக்கோரி எல்ஐசி ஊழியர்கள், அதிகாரிகள் வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்ஜசி பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் இணைய இறுதி வாய்ப்பு வழங்க வேண்டும். ஐந்து நாள் வேலை திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். முதல் நிலை அதிகாரிகளின் பதவி உயர்வின் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும். வளர்ச்சி அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சேலம் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் புதனன்று மதியம் ஒரு மணி நேரம் காப்பீட்டு கழக ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முதன்மை அதிகாரிகள் உள்ளிட்டோர் வெளிநடப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எ.கலியபெருமாள், ஓய்வுபெற்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் டி.சேஷகிரி மற்றும் ஆர்.தர்மலிங்கம், லட்சுமி சிதம்பரம், அங்கண்ண வெங்கடேஷ், செந்தில்குமார், தனராஜேஷ் உள்ளிட்டு திரளனோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: