இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு மன்னார்குடி பின்லே மேனிலைப் பள்ளி  மைதானம்அருகே தோழர் ஏ.பி.பரதன் நினைவரங்கத்தில் புதனன்று
(28.3.2018) துவங்கியது. 31.3.2018 முடிய நான்கு நாட்கள் நடைபெற விருக்கும் மாநாட்டின் முதல் நாள் துவக்க மாநாடு மாநில செயற்குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி தலை மையில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியில் பிஎஸ்ஆர் நினைவிடத்தி லிருந்து கொண்டுவரப்பட்ட பிஎஸ்ஆர் நினைவு தியாகச் சுடரை தேசிய கவுன்சில் உறுப்பினர் தா. பாண்டியன் பெற்றுக் கொண்டு ஏற்றி வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24வது மாநாடு மன்னார்குடியில் புதனன்று துவங்கியது. மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மேடையில் (இடமிருந்து) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் து.ராஜா எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள்.

தேசிய செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,சி. மகேந்திரன், வெங்கடாச்சலம், நாராயணன், பத்மாவதி, எஸ்யுசி்ஐ மாநில பொதுச் செயலாளர் ரெங்கசாமி உள்ளிட்டோர் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.