புதுதில்லி, மார்ச் 27 –
கர்நாடகத் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாகவே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் வெளியிட்டது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பாஜக-வின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று ஏற்கெனவே வலுவான புகார்கள் இருந்து வரும்நிலையில், தற் போது ஆணையத்தை முந்திக்கொண்டு, அமித் மாளவியா தேர்தல் தேதியை வெளியிட்டதன் மூலம் பாஜக – தேர்தல் ஆணையம் இடையிலான ரகசியக் கூட்டு அம்பலமாகி இருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத், அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் ஊடகங்கள் முன்பு அறிவித்தார்.

ஆனால், ராவத் அறிவிப்பு வெளியிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில்அறிவித்தார். இது எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் அதிர்ச்சிக்கு உள் ளாக்கியது.இதனிடையே, அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்திடம், அமித் மாளவியாவின் ட்விட்டர் பதிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“கர்நாடகத் தேர்தல் தேதியை, நீங்கள் (தேர்தல் ஆணையம்) அறிவிக்கும் முன்னரே பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளாரே அது எவ்வாறு நடந்தது?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கு, நேரடியாக பதில் எதையும்தெரிவிக்க முடியாத ராவத், “தேர்தல் அறிவிப்புகள் குறித்த சில விஷயங்கள்கசிந்துள்ளன; அதற்கான நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாகவும் நிர்வாக ரீதியாகவும் எடுக்கப்படும்” என்று மட்டும் சமாளித்தார்.

ஆனால், “தேர்தல் ஆணையத்தின் ரகசிய தகவல்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? பாஜக சூப்பர் தேர்தல் ஆணையமாக செயல்படுகிறதா? அப்படியானால் தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் மீது எதிர்க்கட்சிகள் எவ்வாறு நம்பிக்கை வைத்திருக்க முடியும்? என்று காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. “இந்த பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்தவேண்டும்; பாஜக நிர்வாகி அமித் மாளவியா மீது காவல்துறையும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் மூத்ததலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தினார்.குட்டு உடைந்ததால், பதற்றமடைந்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையில், புதுதில்லியில் உள்ள தலைமைத் தேர் தல் ஆணையத்திற்கு சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்த நக்வி, “ மாளவியா செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே, தேர்தல் தேதி குறித்து ட்விட்டரில் பதிவு செய்தார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப்பதிவு வெளியிடப்படவில்லை” என்றார். மாளவியாவும் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கக் கடிதம் அளித்துள் ளார். அதில், கர்நாடகத் தேர்தல் குறித்துகாலை 11.06 மணிக்கு ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது என்றும், அதன் அடிப்படையிலேயே 11.08 மணிக்கு, தான் தேர்தல் தேதியைப் பதிவிட்டதாகவும் மாளவியா பம்மிப்பதுங்கியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.