#சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை – சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார்,இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,
தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?

அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம்அமையவிருக்கும் சாலையானது கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்காக.( Jindal steel)

ஆம், ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக
தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது. அதில் முதன்மையான திட்டம் சேலம் மாவட்டத்தில் உள்ள
கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது.

இரண்டாவது திருவண்ணாமலை மாவட்டம் கல்வராயன்மலையில்
இருந்து இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது, இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் இரும்புத்தாது வளங்களை வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் சென்னை துறைமுகத்துக்குகொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.

அது தான் இந்த சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமை சாலை. இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான
பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும்.

நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது. இதற்கு தமிழக அரசும் உடந்தை.

தயவு செய்து தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்துகூடுமானவரை ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள்,

#எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்!!

Suseela Anand முகநூல் பதிவிலிருந்து  Lawyer கதிரேசன் whatsapp பதிவு

Leave A Reply

%d bloggers like this: