கோழிக்கோடு:
அதிக அளவிலான தொழிலாளர்களை அணிதிரட்டவும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான செயல்திட்டங்களுடனும் சிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. அதையொட்டி கோழிக்கோடு கடற்கரையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் அணிவகுத்த பேரணியும் நடைபெற்றது.பேரணியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். சிஐடியு தலைவர் டாக்டர்.கே.ஹேமலதா, பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி,துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், கேரள மாநிலத் தலைவர் ஆனத்தல வட்டம் ஆனந்தன், மாநில பொதுச்செயலாளர் எளமரம் கரீம் உள்ளிட்ட தலைவர்கள் பேரணி நிறைவாக நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: