கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை படைத்தது வரும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சர்ச்சைகளிலும் சாதனை படைத்தது வருகிறார். @ 2016-ம் ஆண்டு கிறிஸ்ட் சர்ச் நகரில் நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் நடுவருடன் ஏற்பட்ட மோதலில் கெட்ட வார்த்தைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

@ கடந்த ஆண்டு பெங்களூருவில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ். முறைக்காக பெவிலியன் அறையை நோக்கி சக வீரர்களிடம் உதவி கேட்டு மாட்டிக்கொண்டார்.

@ ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் வேகத்தை சமாளிக்க முடியாமல்,தனது வழக்கமான வீர வசனத்தால் ஆண்டர்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

@ தற்போது நடைபெற்று வரும் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரபாடா மீதான தடையை ஐ.சி.சி. நீக்கியது. ஐ.சி.சி.யின் முடிவு குறித்து ஸ்மித் கேள்வி எழுப்பி இருந்தார்.எங்களை பார்த்து கேள்வி கேட்பதா? என ஐ.சி.சி. நிர்வாக குழு உறுப்பினர்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

@தற்போது பந்து சேதப்படுத்திய பால்டேம்பரிங் நிகழ்ச்சி.

Leave a Reply

You must be logged in to post a comment.