தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என தூத்துக்குடி மக்கள் சூளுரைத்துள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்ட பாணியில் வெடித் துள்ள போராட்ட அலை, தூத்துக்குடியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.இப்போராட்டத்தின் மையப்புள்ளியாக உள்ள அ.குமரெட்டி யாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். திங்களன்று 43-வது நாளாக போராட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற பொது மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வாச
கங்கள் அடங்கிய அட்டையை ஏந்தி யிருந்தனர். பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆலை விரி வாக்கம் விவகாரத்தில் அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

களத்தில் இறங்கிய மாணவர்கள்
இதனிடையே ஸ்டெர்லைட் விரிவாக்கத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தூத்துக்குடி மத்திய வணிகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மாலையில் பொதுமக்கள் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கில் பொதுமக்கள் பங்கேற்றனர். மக்கள் குடும்பத்தோடு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட கூட்டத்தைப் போல தூத்துக்குடியில் மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். இரவு வெகுநேரம் வரை போராட்டம் நடைபெற்றது. அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள், இளைஞர்கள் போராட்ட த்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்கள் செல்போன்களில் விளக்குகளை ஒளிரவிட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வயல்களில் வேலை செய்தார்கள்.

இந்தப் பின்னணியில் கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் தீவிரமாக இறங்கி யுள்ளனர். திங்களன்று அந்தந்த கல்லூரிகள் முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த திரள்வோம் என்று வாட்ஸ்அப்பில் மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து தூத்து க்குடியில் உள்ள முக்கிய கல்லூரிகள் முன்பு திரண்டு இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வ.

உசி கல்லூரி முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.அமர்நாத் தலைமையில் இணைச் செயலாளர் இ.சுரேஷ் முன்னிலையில் கல்லூரி மாண வர்கள் ரமேஷ், முனீஸ், கிருஷ்ணா பிரபு, கிருஷ்ணமூர்த்தி, பொன்ராம், மணிகண்டன், கார்த்தி, தினேஷ்குமார் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.